Event, Villupuram GLUG

கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022

Event Poster #1
Event Poster #2

VGLUG அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 20 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கபிலர் கணினியகம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு கார்க்கி அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், சாமா டெக்னாலஜிஸ் நண்பர்கள், Village GLUGs நண்பர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், VGLUG தன்னார்வலர்கள் என வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார்.

விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கலீல், சதீஷ், ஹரிப்பிரியா, மணிமாறன், கீர்த்தனா ஆகியோர் VGLUG சார்பாக நினைவுப் பரிசு கொடுத்து இவ்விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் மூலம் கபிலர் கணினியகம் திறந்து வைக்கப்பட்டது. பிறகு, சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களையும், தொழில்நுட்ப ரீதியாகவும் பகிர்ந்து கொண்டனர்.

திரு.ராகேஷ் அவர்கள் டெக்னாலஜி குறித்து மிகவும் தெளிவாக பேசினார். டெக்னாலஜி ஒருவர் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது மற்றும் அது யாருக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதைப் பற்றி பேசினார். டெக்னாலஜியின் மூலமாக அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்த முடியும் என்ற கருத்தை அவர் பதிவு செய்தார். ஆசிரியர் திரு.திலிப் அவர்கள், மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் கிடைத்த நேரத்தில் வாழ்வில் முன்னேற்றம் அடைவது குறித்து பேசினார். அவர் தமிழ்நாடு பாடதிட்டத்தில் டெக்னாலஜியின் மூலமாக அவர் முன்னெடுத்த செயல்பாடுகளை விரிவாக பகிர்ந்துகொண்டார். டெக்னாலஜி மாணவர்களை சென்றடைய வேண்டும் அது நல்ல தாக்கத்தை மாணவர்களிடத்தில் கொடுக்கும் என்று கூறினார்.

அதன் பிறகு பேசிய சாமா டெக்னாலஜிஸ்-இன் நண்பர்கள் திரு மலைக்கண்ணன், திரு பிரிதிவ், திரு பிரவீன் குமார் அவர்கள் தங்கள் வாழ்வின் அனுபவங்களையும், தொழில்நுட்ப தற்போதைய நிலைமையையும், அலுவலக கட்டமைப்புகளையும், மென்பொருள் தொழில்நுட்பத்தில் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்

திரு கார்க்கி அவர்கள் 100 GLUG 100 Village என்னும் முன்னெடுப்பை பற்றி பேசினார். அதன் நோக்கம் மற்றும் தற்போது 5 கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறி அதில் பாணம்பட்டு கிராமத்திலிருந்து வந்திருந்த திரு.செந்தமிழன் அவர்களுக்கு பேச அழைப்புவிடப்பட்டது. திரு.செந்தமிழன் அவர்கள் பாணம்பட்டு கிராமத்தில் சமூக நூலகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதன் தேவை தற்போதைய நிலை குறித்து பகிர்ந்துகொண்டார். மேலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் தேவையை VGLUG எவ்வாறு நிவர்த்தி செய்து தருகிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

VGLUG வழங்கும் Python, Flutter தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் பயன் பெற்ற, ராமையா VGLUG உடனான பயணத்தை பற்றி கூறினார். இவர் 2019 ஆண்டு VGLUG நடத்திய python வகுப்பில் பயின்றவர் அவர் நேர்காணலில் வெற்றி பெற்று நிறுவனத்தில் வேலை கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் மற்றும் python பயிற்சியினால் அவர் எதிர்கொண்ட நேர்காணலை எளிதில் வெற்றியடைய உதவியாக இருந்தது என்று அவர் பேசினார். பிறகு, சிவசக்தி அவர்கள் 2021ஆம் ஆண்டு VGLUG நடத்திய Flutter வகுப்பில் பயின்றவர் இவர் இப்போது internshipக்கு தேர்வாகி இருக்கிறார். VGLUG நல்ல தாக்கத்தை தன் வாழ்வில் ஏற்படுத்தியது அது மட்டுமன்றி தானும் இதில் சேர்ந்து செயல்படுவேன் என்று கூறினார்.

கணியம் அறக்கட்டளையின் திரு சீனிவாசன் அவர்கள் Free software பற்றியும் அதன் தேவையையும் பேசினார். இவர் அறிவுப் பகிர்தலின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, விஜயலட்சுமி அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி விழாவை சிறப்பித்தனர்.

VGLUG Group photo
Saama Technologies Team – Group photo

நிகழ்வு முடிந்த பிறகு சிறப்பு விருந்தினர்களும் VGLUG தன்னார்வலர்களும் கலந்துரையாடல் செய்தனர் பிறகு அனைவரும் மதிய உணவுடன் கபிலர் கணினியகம் திறப்பு விழா இனிதே நிறைவடைந்தது.

Event photos: https://photos.app.goo.gl/Dji5aVY452ajUcQn7

Event Invitation: https://vglug.org/2022/02/16/kabilar-kaniniyagam-grand-opening-20-02-2022

நிகழ்ச்சி நடக்கவிருந்த முந்தைய நாளில் அலுவலகத்தை VGLUG தன்னார்வலர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

Thanks & Credits To

  • விழாவினை சிறப்பித்த விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள்.
  • விழாவிற்கு வருகை தந்த பெற்றோர்கள் & மாணவர்கள்.
  • சாமா டெக்னாலஜிஸ் நண்பர்கள், கணியம் அறக்கட்டளை ஆர்வலர்கள் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் ஆர்வலர்கள்.
  • Poster design – Vijayalakshmi, Karkee, Sowndharya, Haripriya
  • Blog – Sangeetha, Dhilip, Manimaran
  • Event Organize – VGLUG Team
  • Pre event – Sathish, Prathap, Amutha, Venkatesh, Guru, Dhilip, Viji and Kowsalya.
  • Photos – Krishna, Guru

2 thoughts on “கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s