அனைவருக்கும் வணக்கம்!
இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஆறாவது கிளையாக உதயமானது அரசூர் கிராம கிளை.
டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!!!
நாள் : 26-01-2024
நேரம் : மதியம் 4 மணி
இடம் : அரசூர் கிராமம், விழுப்புரம்

தொடக்க விழா:
சமீப காலமாக பல போலி செய்திகள், வதந்திகள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன. இது சமூகத்தில் தேவையற்ற தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய போலி மற்றும் தவறான இணைய செய்திகள் பற்றிய விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் VGLUG பல கிராமங்களில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை நடத்தியும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பகிர்வையும் செய்து வருகிறது. அந்த வகையில், VGLUG அமைப்பு 100 Villages 100 GLUGs என்ற முன்னெடுப்பின்கீழ், முன்னதாக 5 கிளைகளை வெவ்வேறு கிராமங்களில் தொடங்கி இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆறாவதாக கிளை அரசூர் கிராமத்தில் 26-01-2024 அன்று தொடங்கியது.

இந்த கிளையை தொடங்க அரசூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் , சக்திவேல் , லோகநாதன் , M. அரவிந்த் , அரவிந்த் , விக்னேஸ்வரன் மேலும் ப்ரெசிடெண்ட் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் : கதிரவன் , சரசு ஆகியோர் மிகவும் உதவியாக இருந்தனர்.
அரசூர் கிளையின் தொடக்க நிகழ்வில், VGLUG அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சதிஷ் அவர்கள் VGLUG குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினார். பிறகு கிராமங்களை நோக்கிய VGLUG-இன் கிளைகளின் தேவையையும், கட்டற்ற மென்பொருளின் தேவைகளையும், போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்தும் விவரித்து பேசினார். மேலும் இணையத்தில் உள்ள செய்திகளை எவ்வாறு அணுக வேண்டும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை எவ்வாறு அறிந்துகொள்வது பற்றியும் விவரித்தார்.

இதை தொடந்து VGLUG அமைப்பின் திரு. கார்க்கி அவர்கள் இனி வரும் வாரந்திர கூட்டத்தை பயனுள்ளதாக எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பதையும் மாணவர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர்களிடம் உரையாடினர்.

இறுதியாக திலிப் அவர்கள் அரசூர் GLUG-இல் வாரந்திர கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த கூட்டத்தில் VGLUG அமைப்பின் செயல்பாட்டு குழுவினர்களான கௌசல்யா, ஹரிபிரியா மற்றும் தீபக் ஆகியோர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறாக, அரசூர் GLUG வெற்றிகரமாக உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது!
