Villupuram GLUG

Inaguration of Data Analytics with Python & Devops Training

நிகழ்ச்சி நிரல் :

நாள் : 26-05-2024

நேரம் : 10.00 AM

சிறப்பு விருந்தினர்கள் :

  • Dr. D ரவிக்குமார் (Member of Parliament )
  • K. C பிரவீன் குமார் (saama technologies )
  • Dr. A தேவி (Senior member IEEE)
  • B. விஜயகுமார் (Zilogic systems)
  • கார்த்திக் அன்பழகன் (Venzo technologies )

அறிவியல் தொழில்நுட்பம் மக்கள் வயப்படுதல்!

தகவல்தொழில்நுட்பத்தில் புதுமைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிற இக்காலத்தில் அதன் அடிநாதமாக திகழும் கணிணி நிரலாக்க மொழியான பைத்தானை கிராமப்புற மாணவர்களுக்கு கற்பிக்கும் VGLUG அறக்கட்டளை நிகழ்ச்சி அரங்கம் நிறைந்து நடைபெற்றது.

விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. இரவிக்குமார் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

சென்னையில் உள்ள பிரபல தகவல்நுட்ப நிறுவனங்களை சார்ந்த முன்னனி கணிப்பொறி வல்லுநர்கள் திரு. பிரவின்குமார், திரு. விஜயகுமார், திரு. கார்த்திக் அன்பழகன் மற்றும் கல்வியாளர் முனைவர். தேவி அவர்கள் பங்கேற்று பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறையின் வேலைவாய்ப்பு குறித்தும் கருத்துரை வழங்கினார்கள்.

மேலும் கடந்த ஆண்டு தொடர்ந்து 6 மாத பயிற்சியை முடித்த  மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

முதல் 30 நிமிடம் கடந்த ஆண்டு பயிற்சியை மேற்கொண்ட மாணவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் தொழில்நுட்ப சம்பந்தனமான கேள்விகளை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு தங்களின் ஆர்வங்களை வெளிகாட்டினர்.

நிகழ்விற்கு VGLUG அமைப்பின் நிறுவனர் திரு. கார்க்கி அவர்கள் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்
திரு. சதீஷ்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்றனர்

மேலும் நடப்பாண்டு மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் வந்து  சிறப்பித்தனர்.

Leave a comment