Date: 8th September 2024 (Sunday)
Time: 10:00 AM to 1:00 PM
Venue:
VGLUG Foundation
SRIMAA PRESCHOOL (Gov Recognized)
Landmark: Opposite to BSNL Exchange
Villupuram 605602.

கட்டற்ற மென்பொருள் உலகத்தில் விக்கி மீடியாவின் பங்கை எவராலும் தவிர்க்க முடியாது. அறிவு எனும் பெரும்சுடரை எந்த விதமான ஆளுகைக்கும் உட்படாமல் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மென்பொருட்களில் விக்கிபீடியா முதன் மதிப்பை பெறுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும். உலகின் எந்த ஒரு பொருளையோ செயலையோ அறிந்து கொள்வதற்கு விக்கிபீடியாவை தான் முதலில் அணுகுவோம். விக்கிமீடியா நிறுவனம் பல கட்டற்ற மென்பொருள் அர்ப்பணிப்பை தந்திருக்கிறது.
1. விக்கிபீடியா
அனைத்து மொழிக்கும் பொதுவாய் நின்று அறிவுக்களஞ்சியமாய் செயல்படும் விக்கிபீடியா, அன்றாடம் பயன்படும் ஒரு தேவையாக மாறி விட்டது. இது மட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் தேடல் எனும் சொல்லின் வலிமை பெருகி விட்டது. அனைத்தையும் இணையத்தில் தேடி வாழ்க்கையை ஓட்டும் நம்மை போன்ற மானுடர்கள் விக்கிபீடியாவை தவிர்க்க முடியாது என்பதை மறுக்க முடியவில்லை. சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகளில் விக்கிபீடியா பயன்படுகிறது. மற்ற விக்கி மென்பொருளை விட விக்கிபீடியா முதன்மை வகிப்பதை காண இயலும்.
2. விக்சனரி
அகராதி எனும் சொல்லை அனைவரும் கேட்டிருப்போம், அதே போல தான் விக்சனரியும், ஒரு அகராதியில் சொல்லின் பொருளை தேடுவதை போல இதன் மூலம் பொருள் வேட்டையை தொடரலாம். எங்கேயும் எப்போதும் நமக்கான குழப்பத்தை தெளிய வைத்து கொண்டிருக்கிறது விக்சனரி.
3. விக்கி செய்திகள்
விக்கிசெய்தி கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும். செய்திகள் பரிமாறுவதற்கு தகுந்த மென்பொருளாகும்.
4. விக்கி மூலம்
விக்கி மென்பொருட்களில் நூலகம் என அழைக்க படும் மென்பொருள் விக்கி மூலம் ஆகும். பல மொழி நூல்கள் எழுத்துவடிவமாக நமக்கு கிடைக்கிறது. இவற்றின் பயன்பாடு மிகப்பெரியது. நாட்டுடைமையாக்கபட்ட நூல் முதல் அனைத்து நூல்களும் விக்கி மூலத்தில் பயனருக்கு விருந்தாக அமைகிறது.
5. விக்கி மேற்கோள்
பல்வேறு மொழியியல் வல்லுநர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகளின் மேற்கோள்கள், கொள்கைகள் ஆகியவற்றை கொண்ட தொகுப்பை வழங்குவது விக்கி மேற்கோள். இதில் சொற்தொடர்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவை அடங்கும்.
6. விக்கிநூல்கள்
இது முற்றிலும் நூல்கள் இயற்றுவதற்காக உருவாக்கம் செய்யப்பட்டது. விக்கிநூல்கள் மூலம் நீங்கள் எழுத விரும்பும் நூலையோ, அல்லது பாடத்தையோ எழுத இயலும்.
7. விக்கியினங்கள்
உயிரியல் வகைப்பாட்டியல் படி, உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இது முழுமையான உயிரியல் வகைப்பாட்டு தளமாகும். அழியும் தருவாயில் இருக்கும் படிமங்களை குறிப்பெடுத்து உயிரியல் துறைக்கு சிறந்த பயனாக உள்ளது.
8. விக்கிமீடியா பொதுவகம்
பொதுவகம் என்ற திட்டத்தின் கீழ் நிழற்படங்கள், நிகழ்படங்கள்(காணொளி), அசைப்படங்கள் போன்ற ஊடகங்கள் பேணப்படுகின்றன. இதன் மூலம் ஊடகம் சார்ந்த சேவைகளை பெற முடியும்.
9. மீடியாவிக்கி
மீடியாவிக்கி என்பது இவை அனைத்தையும் கட்டி காத்து மேம்படுத்தும் மென்பொருள் பிரிவாகும். இதிலும் பங்களிப்பு செய்யலாம். அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொதுமை பிரிவே இது.
மேலும் பல மென்பொருள் திட்டங்கள் விக்கிமீடியாவில் உள்ளது. உதாரணமாக விக்கிமேப்பியா, விக்கி பல்கலைக்கழகம், விக்கி பயணம் போன்ற பல நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் நமக்கு பங்களிப்பின் வித்தாய் அமைகிறது.




Meetup clicks are captured during WIKI SOURCE mass contribution..!

