Event, Villupuram GLUG

Python Training & Internship Inauguration @VilupuramGLUG – 28/07/2019

கல்வியும் காசும்!!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்றாகி விட்டது. தொழிற்நுட்பத்தை சார்ந்த விழிப்புணர்வு நம் மக்களிடம் மிக குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக கிராம புறங்களை எடுத்துக்கொண்டால், நகர புறத்தை காட்டிலும் இதன் சதவீதம் மிக குறைவாக தான் இருக்கின்றது என பல ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.

நாங்கள் யார்..?

ஆனால், இத்தகைய நிலையை முழுவதுமாக உடைத்தெறிய வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு விழுப்புரத்தில் இயங்கி வருவது தான் எங்கள் குழு! இதன் பெயர் ‘விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமும்”. ஆங்கிலத்தில் “Villupuram GNU Linux Users Group” என்று சொல்வார்கள். நாங்கள் இதுவரை பல முக்கிய பயிற்சிகளை மாணர்வகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், இது வரை சிறிய அளவில் நாங்கள் செய்த முயற்சிகளை இம்முறை சற்று பெரிய அளவில் செய்ய திட்டமிட்டோம்! இதன் முடிவு தான் “Python ” என்கிற programming language-ஐ மாணவர்களுக்கு இலவசமாக சொல்லி தரலாம் என்பதே. இந்த “Python Free Training”-ஐ தொடங்குவதற்கு, குழுவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே முக்கிய காரணமாகும். குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல வேலைகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வியும், தொழிற்நட்பம் சார்ந்த விரிந்த அறிவும் மிக முக்கியம் என்பதற்காகவே இந்த பயிற்சிக்கான வேலைகளை நாங்கள் முதன்மையாக எடுத்து செய்தோம்.

Python Free Training and Internship

VGLUG organize free technical training and internship with stipend program every year focused at enabling students on various free software tools and technologies which helps them add career value.

This year, We are going to conduct training with internship program on web information extraction using Extraction, Transfer, Load (ETL) technique with python, JavaScript, HTML”.

Poster

Registration Link : https://vglug.org/freetraining/

Phase 1: Training

This training will be happen on every Sunday from 4th week of July to November

Technical Stuffs:

  • Basic to Advanced Python programming
  • Flask – Web framework
  • Scrapy – web-crawling framework
  • Web page pattern finder using ML
  • Selenium – web automation
  • Web Socket
  • Web Proxy

Phase 2: Internship

Selected students will be working as an intern with stipend for 6 months

கூட்டு முயற்சி..!

முதல் கட்டமாக போஸ்டர்-ஐ சதீஷ் அவர்கள் தயார் செய்தார். அடுத்தது, இதற்கான வலைத்தளத்தை எத்திராஜ் அவர்கள் உருவாக்க ஆரம்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை கலீல் மற்றும் கார்க்கி ஆகியோர் இணைந்து செய்தனர். பின் எங்களின் அடுத்த முயற்சி சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மற்றும் கல்லூரிகளை நேரில் தொடர்பு கொள்வது தான். இதற்கான முயற்சிகளை ஆரம்பம் முதலே ஆதம் செய்து வந்தார். இந்த பயிற்சிக்கான பதிவுகள் (ரெஜிஸ்ட்ரேஷன்) தொடங்கியது. 460+ மாணவர்களோடு இந்த இலவச பயிற்சிக்காக பதிவு செய்தனர்.

மக்களுடன் மக்களாக..!

இவ்வளவு மாணவர்களுக்கு எங்களின் இந்த புதிய முயற்சி சென்றடைந்ததற்கு காரணம், நேரடியாக மாணவர்களை நோக்கி கல்லூரிகளுக்கே சென்று பேசியது தான். இந்த பயிற்சியை மாணர்வர்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என கலீல், சதீஷ், ஆதம், ஹரி பிரியா, விஜி போன்றோர் கூட்டு முயற்சியாக கல்லூரிகளுக்கு சென்று இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Adam, Haripriya, Vimal
Khaleel

வாய்புக்கான களம்! 

இதில் மிக கடினமான விஷயமே மாணவர்களை தேர்வு செய்வது தான். அதுவும் 460+ மாணவர்களில் இருந்து 40 மாணவர்களை தேர்வு செய்வது தான் எங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான விஷயமாக இருந்தது. இந்த முயற்சியில் கார்க்கி, எத்திராஜ், கலீல், சதீஷ், மணிமாறன், ஸ்வேதா, ஆதம், ஹரி பிரியா, விஜி, விஷ்ணு ஆகிய பத்து பேரும் சேர்ந்து ஆளுக்கு சுமார் 50+ மாணவர்களுக்கு மொபைலில் தொடர்பு கொண்டோம். மாணவர்களின் பொருளாதார அடிப்படை மற்றும் அவர்களின் ஆர்வத்தை வைத்தே இந்த 40 பேரை நாங்கள் தேர்வு செய்தோம்.

பயிற்சிக்கான முதல் நாள்..!

அடுத்து, இந்த நிகழ்விற்கான ஆரம்ப கட்டம் வந்தது. ஜூலை 28-ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் இந்த “Python Free Training”-கிற்கு வந்தனர். நாங்கள் தேர்வு செய்த 40 மாணவர்கள் மட்டும் இல்லாமல் மேலும் கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். விழா தலைமை தோழர். கனகராஜ் அவர்கள். இந்த நிகழ்வில் இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு முக்கியம். ” சமதர்மம் என்பது நமக்கு மேல் இருப்பவர்களுடன் நாம் சமமாவது மட்டுமல்ல, நமக்கு கீழ் இருப்பவர்களை நமது நிலைக்கு உயர்த்துவதும் தான்”… இப்படி  பல முக்கிய கருத்துக்களை மாணவர்கள் முன் வைத்தார். மேலும் மாணவர்களின் இன்றைய நிலை, கல்வியின் தரம், புதிய கல்வி கொள்கை, தொழிற்நுட்பத்தின் இன்றைய ஆளுமை, அறிவியலில் அதீத வளர்ச்சி போன்றவற்றை பற்றியும் தெளிவுப்படுத்தினார்.

Kanakaraj’s Speech

எங்களின் நோக்கம்..!

Karkee’s Speech – Why VGLUG
Khaleel’s Speech – Why this Python training
Participants

அதன் பின் தோழர் கார்க்கி அவர்கள் “விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்  குழுமம்” எதற்காக இங்கு இயங்கி வருகிறது என்பதை பற்றிய தெளிவை மாணவர்களுக்கு விளக்கினார். அடுத்து, தோழர் கலீல் அவர்கள், எதற்காக இந்த “Python” பயிற்சியை நாங்கள் இலவசமாக தருகிறோம், இதற்கான மூல காரணம், நோக்கம் ஆகியவற்றை புரிய வைத்தார். அதன்பின் தோழர் எத்திராஜ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இந்த பயிற்சியை பற்றிய முன்னுரையை தந்தனர். இந்த விழாவை தோழர். ஹரி பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Ethiraj’s Speech
Sathish’s – Speech
Haripriya’s Speech

பயிற்சியின் சாராம்சம்..!

இறுதியாக 40 மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் பெயரையும் வைக்க சொன்னோம். இப்படிப்பட்ட குழு முயற்சி ஒரு புது வித அனுபவத்தை  மாணவர்களுக்கு நிச்சயம் தரும். காரணம், இது வகுப்பரை சார்ந்த கல்வியை போன்று இல்லாமல், புதுமையான கற்கும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். இனி இந்த பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 3 மணி நேரம் தொடர்ந்து நடக்கும்.  முதல் 6 மாதங்கள் பயிற்சி வகுப்புகளும், அடுத்த 6 மாதங்கள் இன்டெர்ஷிப்பும் வழங்கப்படும். இதுவே இந்த பயிற்சியின் கருவாகும்!

இனி நாம் ஒன்றாக இணைந்து செய்ய வேண்டிய வேலைகளும், பொறுப்பும் அதிகமாகவே உள்ளது, தோழர்களே!

Power To The People

Group photo
Group selfie
About VGLUG in News papers

Blog Links

Cheers!

  • Event Arrangement – Vilupuram GLUG members
  • Speakers – Kanakaraj, Karkee, Sathish, Khaleel, Ethiraj, Haripriya
  • Blog – Hari Priya, Manimaran
  • Photos – Dhinakaran, Guru, Adam
  • Special Thanks – All Vilupuram GLUG members and participants.

#POWER_TO_THE_PEOPLE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s