VGLUG அறக்கட்டளை மற்றும் TNSDC இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளை கடந்த சில மாதங்களாக செய்ததன் பயனாக திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று (27 -Aug-2022) விழுப்புரத்தில் நடைபெற்றது.

இத்திட்டம், மதிப்பிற்குரிய விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் அவர்களால் திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் Dr. J. ஜெயச்சந்திரன் அவர்களும், திரு. சு. முரளி நிறுவனர், கிரிஷி டெக்னாலஜிஸ், சென்னை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் வரவேற்புரையை திரு. கலீல் ஜாகீர் அவர்களும், அறிமுகவுரையை திரு. உ. கார்க்கி அவர்களும் வழங்கி சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் VGLUG சார்பாக நினைவு பரிசுகளை திரு. எத்திராஜ் வழங்கினார்.



நிகழ்வின் தொடக்கமாக, VGLUG என்ன செய்கிறது? | VGLUG அமைப்பு குறித்த ஆவணப்படம் | VGLUG Documentary காணொளி அனைவரது முன்னிலையிலும் ஒளிபரப்பப்பட்டது.
Video link: https://youtu.be/C1AXiyDy0tY
விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை. இரவிக்குமார் அவர்கள் பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் குறிப்பிட்டதாவது, VGLUG அமைப்பின் பத்து ஆண்டுகால லாப நோக்கமற்ற பணியை குறிப்பிட்டு, விழுப்புரத்தில் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை VGLUG அறக்கட்டளை எடுப்பதன் தேவையும், பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார்.


அதன்பின், சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் Dr. J. ஜெயச்சந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் VGLUG அறக்கட்டளையின் பத்து ஆண்டுகால கூட்டு உழைப்பினை குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார். மேலும் அவர் தொழில்நுட்ப தேவைக்காக இளைஞர்கள் பெருநகரங்களுக்கு செல்வது தொடர்ச்சியாக இருந்தவனும் உள்ளது. அதற்காக விழுப்புரத்தில் IT Park கொண்டுவர VGLUG இன் பல நாள் கோரிக்கையை பற்றியும் அதன் வெற்றியையும் குறிப்பிட்டார்.

பிறகு, திரு. முரளி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அதில் அவர் VGLUG வழங்கும் இலவச பயிற்சி மூலம் பல்வேறு மாணவர்கள் தமது திறன்களை வளர்த்து வருகின்றனர். VGLUG மற்றும் Krishi டெக்னாலஜிஸ் இணைந்து பின்வரும் காலங்களில் பல்வேறு வகையான டெவலப்மென்ட் பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம் அதனை நோக்கி பயணிப்போம் என்று கூறினார். இது குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிக்ச்சியின் ஒரு பகுதியாக VGLUG இன் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக நடத்தப்பட்ட Reels மற்றும் Shorts போட்டியின் வெற்றியாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை. ரவிக்குமார் அவர்களால் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கபட்டது.


மேலும், இந்நிகழ்வில் விழுப்புரத்தில் உள்ள நமது தோழமை நண்பர்கள் திரு. ரவி கார்த்திகேயன், திரு நதர்ஷா, செல்வி கிருத்திகா, திருமதி தேவி, திரு தயாளன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு VGLUG சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.




இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், விழுப்புரம் தோழமைகளுக்கும், பெற்றோர்கள், பயிற்சிக்கான பயனாளிகள், தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்வினை சிறப்பாக ஏற்படுத்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் VGLUG அறக்கட்டளை சார்பாக நன்றியுரையை செல்வி. ஹரிபிரியா வழங்கினார்.



Media coverage

