தொழில்நுட்பக் கல்வியை கட்டற்ற மென்பொருள் (FOSS) வழியாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, செயற்கை நுண்ணறிவு துறையில் அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் VGLUG Foundation நடத்தும் “Python with Agentic AI” பயிற்சி வகுப்பின் துவக்க விழா, கடந்த 26/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, Python, Agentic AI தொழில்நுட்பங்களின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும், VGLUG Foundation-ன் முந்தைய பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வு தொழில்நுட்பக் கற்றல், சமூக ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சிறப்பான துவக்கமாக அமைந்தது.
நிகழ்ச்சி நிரல் 1:
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், திரு. சதீஷ் அவர்கள் VGLUG Foundation-ன் நோக்கம், பயணம் மற்றும் கட்டற்ற மென்பொருள் (FOSS) வழியாக மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி வரும் சமூகப் பணிகள் குறித்து சுருக்கமாக அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சி நிரல் 2: VGLUG அனுபவப் பகிர்வு – கலந்துரையாடல்
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக நடைபெற்ற அனுபவப் பகிர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தீபக், செல்வபாக்கியலட்சுமி, கனிமொழி, மதுசூதனன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் VGLUG Foundation-உடனான தங்களது பயணம், கற்றல் அனுபவங்கள், கட்டற்ற மென்பொருள் (FOSS) தொழில்நுட்பங்கள் மூலம் பெற்ற அறிவு, தொழில் வளர்ச்சியில் VGLUG-ன் பங்கு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்பட்ட அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அனுபவப் பகிர்வு கலந்துரையாடல் அமர்வை திரு. ராம்குமார் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.
மேலும், VGLUG வழங்கும் வாராந்திர தொழில்நுட்ப அமர்வுகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தன்னார்வப் பணிகள் மற்றும் திறந்த மூலப் பங்களிப்புகள் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் ஏற்படுத்திய மாற்றங்களை எடுத்துரைத்தனர். புதிய மாணவர்கள் தொடர்ந்து கற்றல், சமூகப் பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டில் ஈடுபட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சி நிரல் 3: சான்றிதழ் வழங்கும் விழா :
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, VGLUG Foundation-ன் முந்தைய பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சி நிரல் 4: சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை:
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், VGLUG Foundation கடந்த 14 ஆண்டுகளாக கட்டற்ற மென்பொருள் (FOSS) மூலம் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி வரும் சமூகப் பணிகளைப் பாராட்டி சிறப்புரையாற்றினர்.
மேலும், “Python with Agentic AI” பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, செயற்கை நுண்ணறிவு, Python மற்றும் திறந்த மூல தொழில்நுட்பங்களில் திறன்களை வளர்த்துக் கொள்வது தற்போதைய மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தினர்.


நிகழ்ச்சி நிரல் 5: நன்றியுரை
நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் பயனாளர்கள், பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

