Date : 20-Oct-2019 (Sunday)
நமது #VGLUG மக்கள் அனைவரும் 20- அக்ட்-2019 ஆம் தேதி காந்தலவாடி கிராமத்தினை மக்களின் நிலையை அறியும் ஆய்வு மேற்கொண்டோம். இந்த காந்தலவாடி கிராமத்தினை விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு ரவிக்குமார் அவர்கள் இந்த ஆண்டிற்காக தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே காந்தலவாடி கிராமத்தில் மக்களின் நிலையை அறியும் ஆய்வு அன்று காலை முதல் மாலை வரை ஒவ்வொரு வீடாக அவ்வூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதில் #VGLUG சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கள் பங்களிப்பினை அளித்தனர். (அவர்கள் பெயர் கீழே இணைக்கப்பட்டுள்ளது).
ஆய்வில் கண்டறியப்பட்ட பிரதான தேவைகள் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு ஆகியவையாகும்.
கல்வி
கல்விக் கூடங்களின் தரம் உயர்த்தி அதிகப்படியான மாணவ மாணவர்களுக்கு கல்வி அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் தேவைபடுகிறது. ஏனெனில் பல பெண்கள் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் கற்றுத்தருதல், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தல், நூலகம் அமைக்க திட்டமிடுதல், மாலை நேரக் கல்வி ஆகியவைகளை கொண்டு வருதல் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன.
சுகாதாரம் & போக்குவரத்து
சுகாதார நிலை மேம்பாடு கட்டாய தேவையாக உள்ளது. ஏராளமான தெருக்களில் சாக்கடை கழிவுகள் செல்ல சரியான வழி இல்லை. அதற்கான வழிவகை செய்து அவர்களுக்கு பாதுகாப்பான சுகாதார சுற்றுச்சூழல் அமைய ஏற்பாடு செய்தல். சாலைகளை சீரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்தல்.
வேலைவாய்ப்பு
இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிடுதல், பெண்களுக்கான சுய உதவி குழுக்களை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கு தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் பெற அவர்களுக்கு பயிற்றுவித்தல்.
கள ஆய்வு மேற்கொண்ட குழுவின் பரிந்துரைகள்
- கல்வியில் முன்னேற்றம் குறிப்பாக பெண்களுக்கு.
- மருத்துவ வசதி
- போக்குவரத்து வசதி
- வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் பெண்களின் சுய உதவிக்குழுக்களை அதிகரிக்கச் செய்தல்
- விவசாய விளைச்சலை மேம்படுத்த வழிமுறைகளை பயிற்றுவித்தல்
- விளையாட்டு மைதானம் & நூலகம் அமைத்தல்
- சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல்
Our #VGLUG people have visited the village called Kaanthalavadi, Villupuram District, Tamil Nadu which is adopted by Villupuram MP Dr. Ravi Kumar and took survey on each and every houses and suggested the following development scheme to MP.
- Conversion of middle school to higher secondary
- Development of women education and self help groups. And also suggested few ideas on women Entrepreneurship. VGLUG commited to support women Entrepreneurship by the means of free and open source softwares
- Suggested the implementation of technical school education into the government school.
- Improving the road facility and construction of drainage.
- Making the availability of transport like mini bus into the village.
- Finding the youth and implement the skill development program. (VGLUG Supports by providing the FOSS training)
- Here VGLUG committed to provide the technical support where we can implement FOSS to increase the village welfare.
About 30 people (12 women and 18 men) involved in the survey.
The above suggestions are given based on the glance of collected data.
#VGLUG #PowerToThePeople
Photos
Survey Team Members
During Survey
Final Discussion




Survey team members
- Ajith Kumar
- Annapoorani
- Badrinath
- Barani
- Dhanush
- Dhilip
- Ethiraj
- Guru
- Hari Priya
- Hariharan
- Haritha
- Inba
- Jayasri
- Jeyram
- Karkee
- Keerthana
- Kowsalya
- Latha
- Manimaran
- Nandhini
- Nandhini
- Rajeswari
- Sandhiya
- Sathish Kumar
- Sherif
- Srinivasan
- Swathiga
- Vignesh
- Vignesh K
- Vigneshwaran