Social activities, Villupuram GLUG

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 – கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்

அரசியலில் நாம் தலையிடவில்லை என்றால் அரசியல் நம் வாழ்வில் தலையிட்டுவிடும்!

தமிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும், ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்… பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, அரசை கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது, ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு.

அந்த வகையில் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தல்- 2021ல் பங்கேற்கிற பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்த கலந்துரையாடலை இளைஞர்கள் http://www.vglug.org அமைப்பின் சார்ப்பில் முன்னெடுக்கிறோம்.

அனைவரும் வருக!
அரசியல் அறிக!!

Full discussion video

In Meeting

நிகழ்விற்கு வந்தவர்களும்; பேசியவர்களும்🙏🏽❤️

Leave a comment