வெற்றி! வெற்றி!
விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை(G.O.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.
இது மக்கள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி!
விழுப்புரம் பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா அரசாணையின் மூலம் பிரகாசமாகியுள்ளது.
அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் அவர்களின் அளப்பரிய பங்களிப்பு உள்ளது.

அமைய இருக்கும் தகவல் தொழிற்நுட்ப பூங்கா கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசின் கவனத்திற்க்கு தொடர்ந்து VGLUG அமைப்பு கொண்டு செல்லும்.
Government Order
Press meet

VGLUG Effort for Villupuram IT Park Establishment
https://vglug.org/2021/01/21/petition-for-villupuram-it-park-vglug/