அனைவருக்கும் வணக்கம்,
VGLUG சார்பாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பல தொழில்நுட்பங்களை வசதி வாய்ப்பற்ற, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறோம். அப்பணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நாம் ஒரு அலுவலகம் தொடங்கியுள்ளோம். அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் பல நல்லுள்ளங்களின் நன்கொடைகளால் கிடைக்கப்பெற்றுள்ளது. உயர் தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்றுவிக்க இரண்டு கணினிகள் தேவைப்படுகின்றன. தற்போது தமிழக அரசு மூலம் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகளில் பெரிய மென்பொருள்களை(software) இயக்கி பயன்படுத்த முடியாத வகையிலே அதன் வன்பொருள்(Hardware) அமைந்துள்ளது. அதனால் கிராமப்புற மாணவர்கள் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. ஆதலால் அந்த இயலாமையை போக்குவதற்க்கும், கிராமப்புற மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கணினி தேவைப்படுகிறது.
மேலும் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள பாணாம்பட்டு கிராமத்தில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நூலகம் உள்ளது. அது அக்கிராம மக்களுக்கு பல விதத்தில் கல்வியறிவு பெற உதவிகரமாக உள்ளது. அந்த நூலகத்திற்கு ஒரு கணிணி தேவைப்படுகிறது. ஏனெனில் சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவும், அங்குள்ள மாணவர்கள் கணினி குறித்து அறிந்து கொள்ளவும் அது உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை பணமாகவோ பொருளாகவோ வழங்குமாறு VGLUG சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்கண்ட உபகரணங்கள் தேவை:
1.Desktop Monitor – 3 nos
2.Keyboard – 3 nos
3.Mouse – 3 nos
4.RAM 4GB+ – 3 nos
5.HDD/SSD 250GB+ – 3 nos
6.i3 and above processor – 3 nos
7.CPU Box – 3 nos
8.B/W or Color Printer 1nos
9.Computer Table – 3 nos
10.Chair – 3 nos
பொருள் அனுப்ப வேண்டிய முகவரி
VGLUG Foundation
No 416, Ganapathi Nagar, K.K Road,
Villupuram – 605602
Contact : +917502273418
Account Details
Holder Name | VGLUG FOUNDATION |
Acc No | 64012200086283 |
IFSC code | CNRB0016401 |
Bank name | Canara Bank |
நன்கொடை விவரங்களை vpmglug@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
4 thoughts on “Requesting Donation For Rural Women Empowerment through FOSS”