Software Freedom Day, Villupuram GLUG

Software Freedom Day – 2k21

Software Freedom Day

Software freedom day is celebrating every year in the month of September 3rd week all over the world. the main moto of this day to Create awareness among the people about what is software freedom and free software in the markets(free means freedom).

Free Software -> Freedom to study, copy, modify, share the software.

Dear all,

We have Software Freedom Day celebration on coming Sunday, Oct 3. It is an important yearly event to know more about FOSS and it’s activities. We are delighted to welcome you all to this year SFD.

Venue : VGLUG office
Date: Oct 3, 2021
Time: 9.30 AM

Let the celebrations begin!

கட்டற்ற மென்பொருள் தினம் 2021

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் உலகம் முழுக்க உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கொண்டாடப்பட கூடிய முக்கிய நிகழ்வு தான் இந்த கட்டற்ற மென்பொருள் தினம். இந்த நாளின் முக்கிய நோக்கமே கட்டற்ற மென்பொருட்களை பற்றிய விழிப்புணர்வை எல்லா தரப்பு மக்களிடம் ஏற்படுத்துவதே. மேலும், எல்லா தளங்களிலும் கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாட்டை எடுத்து கொண்டு செல்வதுமாகும். இதை நோக்கமாக வைத்து 2013 ஆம் ஆண்டு முதல் VGLUG அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆன்லைன் வழியாக கட்டற்ற மென்பொருள் தினத்தை கொண்டாடினோம். இந்த ஆண்டும் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் இருப்பதால், பெரிய அளவில் இந்த தினத்தை கொண்டாட இயலவில்லை. எனவே சிறிய அளவில் இந்த நாளை கொண்டாடினோம். அதன்படி, அக்டோபர் 3, 2021 அன்று இந்த கட்டற்ற மென்பொருள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அதன்படி, இந்த தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடினோம். இந்த நிகழ்வில் சுமார் 35-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கமாக கட்டற்ற மென்பொருள் தினம் என்றால், எதனால் கொண்டாடப்படுகிறது, இந்த நாளின் நோக்கம் என்ன, இது குறித்த விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்த வேண்டும் போன்ற முக்கிய அறிமுகத்தை ஹரிபிரியா கொடுத்தார்.

அடுத்தாக, ஒருசில கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கினர். WordPress என்கிற முக்கிய பிளாகிங் தளம் பற்றி கீர்த்தனா விளக்கி கூறினார். குறிப்பாக ஏன் ஒருவர் வேர்டுபிரசில் அக்கவுண்ட் வைத்து கொள்ள வேண்டும், அதன் முக்கியத்துவம் என்ன, எப்படி பயன்படுத்த வேண்டும் போன்றவற்றை குறிப்பிட்டு விளக்கினார்.

அடுத்தாக, பல்வேறு கட்டற்ற மென்பொருட்களை பற்றி லதா விளக்கினார். இன்றைய கால கட்டத்தில் கட்டற்ற மென்பொருட்கள் எந்த அளவிற்கு முக்கியம், என்னென்ன வகையான மென்பொருட்கள் உள்ளன, அதை எப்படி தரவிறக்கம் செய்வது போன்றவற்றை எடுத்து கூறினார்.

இந்த ஆண்டில் கட்டற்ற மென்பொருள் தினத்தை மேலும் சிறப்பாக கொண்டாடிட 50 கணினிகளில் லினக்ஸ் ஓ.எஸ்-ஐ நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி 50 கணினிகளில் லினக்ஸை நிறுவி இந்த நாளை சிறப்பித்தோம்.

அடுத்தாக, இந்த 2021 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர்களை VGLUG சார்பாக கார்க்கி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திரு.மணிமாறன் ஒருங்கிணைப்பாளராகவும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக விஜயலட்சுமி, லோகநாதன், லதா மற்றும் விக்னேஷ் ஆகியோர் தேர்தெடுக்க பட்டனர்.

இறுதியாக பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கு இருந்த சந்தேங்கள் குறித்த கலந்துரையாடல் நடந்த பின்னர், நிகழ்வு இனிதே முடிந்தது .

Previous years SFD celebrations:

https://vglug.org/category/software-freedom-day/

2 thoughts on “Software Freedom Day – 2k21”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s