100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 22, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 22, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன மூன்றாவது கூட்டம் இது.

கடந்த வாரம் 2 வீட்டு பாடங்கள் தரப்பட்டது. ஒன்று, கீபோர்ட் ஷார்ட்கட்களில் நாங்கள் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு சில கீபோர்ட் ஷார்ட்கட்களை எழுதி வருவது. இன்னொன்று நோபில் பரிசு பெற்ற சில அறிவியல் அறிஞர்களை பற்றி எழுதி வருவது. இவை இரண்டையும் மாணவர்கள் சிறப்பாக செய்து வந்திருந்தனர்.

இதற்கு அடுத்தாக Libre office Impress presentation என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகத்தை மாணவர்களுக்கு வழங்கினோம். இந்த வார வகுப்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய பள்ளியில் சமர்ப்பிக்க கூடிய மாதிரி ppt ஒன்றை கற்று கொடுத்தோம். இதில் பத்திகளை எழுதுவது, படங்களை இணைப்பது, வீடியோ மற்றும் ஆடியோ சேர்ப்பது, தலைப்பு போன்ற முக்கிய அடிப்படைகளை கற்று தந்தோம். இதே போன்ற ஒன்றை மாணவர்கள் செய்து அடுத்த வாரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

அடுத்ததாக மாணவர்களுக்கு Tux Typing பற்றி வகுப்பு எடுத்தார் லோகநாதன். இதில் எளிதாக எப்படி கணினியில் டைப் செய்ய கற்று கொள்வது என்பதை விரிவாக விளக்கினார். இதை 10 விரல்களில் குறிப்பிட்ட எழுத்துக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்கிற முறையின் மூலம் சொல்லி கொடுத்தார். இதை மாணவர்கள் உற்சாகமாக கவனித்தனர். இதை சில விளையாட்டுகள் மூலமும் செய்து காட்டினார்.

இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே முடிந்தது.

Leave a comment