100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Feb 6, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 6 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன நான்காவது கூட்டம் இது.

10 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விக்னேஷ் அவர்கள் லினக்ஸ் பற்றிய அறிமுகத்தை தந்து, சில அடிப்படை லினக்ஸ் கமெண்ட்சையும் சொல்லி கொடுத்தார்.
மாணவர்கள் ஆர்வமுடன் libre office impress பற்றி செய்முறையை செய்து பார்த்தனர்.
இந்த வாரம் மேலும் இரு VGLUG ஆர்வலர்கள்(வைபவி & அபிநயா) பானம்பட்டு Glug வகுப்பில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பலவற்றை கற்று கொடுத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே முடிந்தது.

மேலும் Vglug ஆர்வலர்கள் அவர்கள் பக்கத்தில் விவரித்தது. https://abinaya672.wordpress.com/2022/02/08/panampattu-glug-meetup/

Leave a comment