விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்
அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த
பானாம்பட்டு GLUG-இல், November 20, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம்.

இந்த வார வகுப்பில்Scratch என்ற கட்டற்றமென்பொருளைப் பற்றி தீபக் அவர்கள் விளக்கினார்.இந்த மென்பொருள் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் சிந்தனை வளர உதவுகிறது. ஓர் சிறிய விளையாட்டை தீபக் அவர்கள் உருவாக்கிக் குழந்தைகளை மகிழ்வித்தார் மற்றும் அவற்றை எப்படி உருவாக்குவது என்று கற்று கொடுத்தார்.

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து Scratch மென்பொருளைப் ஒரு விளையாட்டை உருவாக்கக் கூறினோம்.இதற்காக அவர்களுக்கு கணினி வழங்கப்பட்டது, குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர் .

ஒரு சிறிய இடைவேளை பிறகு பழனிராஜ் அவர்கள் Blender எனும் கட்டற்றமென்பொருளைப் பற்றி
விளக்கினார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு முப்பரிமாண பொருளை
உருவாக்கிக் விளக்கப்பட்டது. பின்பு
குழந்தைகளின் சந்தேகங்களைப்
பெற்று அதற்கான பதில் அளித்தார் பழனிராஜ். இப்படியாக இந்த வார வகுப்பு
இனிதே நிறைவடைந்தது.

