அனைவருக்கும் வணக்கம்,
கடந்த 2013 துவங்கி, பலருக்கு முகவரி கொடுத்த VGLUG அமைப்புக்கு(நமக்கு) பல்வேறு தொழில்நுட்ப, சமூக நலன் சார்ந்த சந்திப்பு கூட்டங்களை நடத்த ஒரு நிரந்தர இடம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் பல நல்ல உள்ளங்களின் ஆதரவில், பல நேரங்களில் நண்பர்கள் அலுவலகம், விழுப்புரம் பூங்கா, கோயில், கல்வி நிலையங்கள், நூலகங்கள் மற்றும் பொதுவான இடங்கள் போன்ற தற்காலிக இடங்கள் கிடைத்துகொண்டே இருந்தன. அது நாம் செய்து கொண்டிருக்கும் வேலைக்கும், நம்மீது இருக்கும் நம்பிக்கையும், நாம் எடுத்துகொண்ட தத்துவத்தின் மீதான நம்பிக்கையினால் மாத்திரமே….
இன்று காலம் நம்வசமாகியுள்ளது.
நமக்கு ஒரு இடம்…
நமக்கு ஒரு முகவரி…
நாம் ஒன்றிணைய ஒரு மையப்புள்ளி.
ஆம். நமக்கான ஒரு அலுவலகம் திறந்து உள்ளோம்.
இது காலத்தின் தேவையும் கூட
கடந்த மாதம் வாடகை வீடு ஒன்று VGLUG- க்கு கிடைக்கப்பெற்றது. அதனை நமது VGLUG அமைப்பின் தன்னார்வலர்கள் அஜித், விஜி, ராம், அன்னபூரணி, சதீஷ், விக்னேஷ், பிரபா மற்றும் குரு இவர்களின் உதவியால் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.


பிறகு, பல நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடைகளின் மூலம் VGLUG அலுவலகத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.



VGLUG அலுவலகத்தில் மகிழ்ச்சி மிக்க முதல் கூட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை(28-Feb-2021) VGLUG அலுவலகத்தில் பல்வேறு தன்னார்வலர்கள் கலந்துகொண்டு முதல் கூட்டம் மகிழ்ச்சியாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் அலுவலகத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்து செல்லலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.



கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அலுவலகத்திலேயே தேனீர் தயார் செய்யப்பட்டது. அதனை அனைவரும் பகிர்ந்து கொண்டோம்.

அலுவலக உபகரணங்கள் வாங்க நன்கொடை அளித்தவர்கள் விவரம்
- Abu Thahir
- Amrish, Viruthunagar
- Anand, Thirukovilur
- Anbu, Puducherry
- Anitha devi, Villupuram
- Arun Prasath
- Ayyanar, Villupuram
- Barani, Kumbakonakm
- Deepash, Thirupattur
- Dharani, Dindugal
- Durga, Chidambaram
- Guru
- Ismail, Villupuram
- Jayapriya, Villupuram
- Kavya, Bangalore
- Keerthana, Pattukottai
- Keerthana, Chennai
- Manikandan, Chennai
- Monika, Thittakudi
- Muthu Kumar, Madurai
- Muthuraj
- Nasrudeen
- Navanee
- Noufal
- P.Barathithasan, Pondy
- Prakash Japan, (Pondy)
- R.sathish, Villupuram
- Raja Ruban, Mannarkudi
- Rajaraman, Chennai
- Santhana Barathi, UAE
- Sathish, Villupuram
- Senthil
- Senthil Kumar
- Shanmuga Sundar
- Sharath, Chennai
- Sowndar
- Sowndarya
- Srimathi
- Sriram
- Subasri
- Tamizh, Thiruvarur
- Thamizh, Pondy
- Udhaya
- மேலும் 12 பெயர் சொல்ல விரும்பாத நண்பர்கள்.
மொத்தம் கிடைக்கப்பெற்ற நன்கொடை ரூபாய் : 33,150
அலுவலக உபகரணங்கள் வாங்க நன்கொடை அளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் VGLUG சார்பாக மனமார்ந்த நன்றிகள்…❤️🙏
தங்கள் அன்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
More details
2 thoughts on “VGLUG அலுவலகம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முதல் கூட்டம் நடைபெற்றது”