100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 4th GLUG at Kondangi – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம்,

இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் நான்காவது கிளையாக உதயமாகிறது கொண்டங்கி கிராம கிளை.

டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!

அனைவரும் வருக! ஆதரவு தருக!!

நாள் : 5-12-2021
நேரம்: மதியம் 3மணி
இடம்: கொண்டங்கி கிராமம், விழுப்புரம்

Inauguration

சமீப காலமாக பல போலி செய்திகள், வதந்திகள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன. இது சமூகத்தில் தேவையற்ற தவறான புரிதலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய போலி மற்றும் தவறான இணைய செய்திகள் பற்றிய விழிப்புணர்வை கிராமபுற மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் VGLUG பல கிராமங்களில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை நடத்தியும், பல தொழில்நுட்பத்தை பகிர்ந்தும் வருகிறது. அதன் தொட்ச்சியாக கொண்டங்கி கிராமத்திலும் 100 Villages 100 GLUGs என்ற முன்னெடுப்பில் புதிய GLUG கிளையை VGLUG அமைப்பு இந்த வாரம்(5-Dec-2021) அன்று தொடங்கியது.

இதற்கு கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் மிகவும் உறுதுணையாக இருந்து அக்கிராம மக்கள் பயன்பெற GLUG திறக்க உதவினார். மேலும் அக்கிராமத்தில் உள்ள லிங்காரம் தாத்தா அவர்தம் வீட்டிலேயே வாரந்திர வகுப்புகளை நடத்த இடம் அளித்து உதவி புரிந்தார் மற்றும் அக்கிராம பள்ளி ஆசிரியர் திருமலைசெல்வன் அவர்கள் பல மாணவர்களுக்கு இந்த கூட்டம் குறித்து தெரிவித்து பல பள்ளிமாணவர்கள் வர உதவி புரிந்தார்.

தொடக்க நிகழ்வில் மணிமாறன் அவர்கள் VGLUG குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் முதலில் கூறினார். பிறகு கிராமங்களை நோக்கிய VGLUG இன் கிளைகளின் தேவையையும், போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்தும் விழ்ப்புணர்வை ஏற்படுத்தினர் மேலும் இணையத்தில் உள்ள செய்திகளை எவ்வாறு அணுக வேண்டும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை எவ்வாறு அறிந்துகொள்வது பற்றியும் விவரித்தார்.

கிருஷ்ணகுமார் மற்றும் ஆசிரியரும் மாணவர்களுக்கு மீண்டும் விளக்கி கூறி இந்த வகுப்பின் தேவையும் தெரிவித்தனர்.

பிறகு பேசிய அஜீத் அவர்கள் தொழில்நட்பத்திற்கும் கிராம மக்களுக்குமான இடைவெளியை கூறி அதை குறைக்க VGLUG எவ்வாறு செயல்படுகிறது என்றும் விளக்கினார். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பகளை நாம் எவ்வாறு கற்று கொண்டு முன்னேற வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு கூறினார்.

இறுதியாக பிரபா அவர்கள் மாணவர்களிடம் பொதுவான கலந்துரையாடலை செய்தார். அப்போது அவர்களிடம் எவ்வாறு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, தங்களை தாங்களே கேள்விகளை எழுப்பி சிந்திக்கக் வேண்டும் மற்றும் தங்களின் தேடலை மேம்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார். இந்நிகழ்வை சாதியமாக்கிய கிருஷ்ணகுமார், பள்ளி ஆசிரியர் திருமலைசெல்வன் மற்றும் லிங்காரம் தாத்தா ஆகியோருக்கு VGLUG சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்க்கு வருகை புரிந்த ஆசிரியர் திருமலைசெல்வன், லிங்காரம் தாத்தா, கிருஷ்ணகுமார், பிரபா, அஜித், மணிமாறன், கனகசபாபதி, லோகநாதன், சிற்றரசு, நரசிம்மன், அருண் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s