100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 8, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன இரண்டாவது கூட்டம் இது.

முதலில் கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஹரி பிரியா மாணவர்களிடம் உரையாடினார். அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். கடந்த வாரம் அம்பேத்கர் பற்றி சிறு கட்டுரை ஒன்றை மாணவர்களிடம் எழுதி வர சொல்லி இருந்தோம். பல மாணவர்கள் சிறப்பாக எழுதி இருந்தனர். இதற்கும் ஒரு மேலே சென்று அம்பேத்கர் பற்றி வாய்வழியாக பேச்சு போட்டியில் பேசுவது போன்று சிறப்பாக பேசினர்.

அடுத்ததாக Kalzium என்கிற அறிவியல் சார்ந்த கட்டற்ற மென்பொருள் பற்றி அறிமுகம் செய்தார். இது தனிம அட்டவணை (periodic table) பற்றிய ஒரு மென்பொருளாகும். இதை கொண்டு தனிமங்கள், அவற்றின் நிறைய எண், அளவுகள், அணு கூறுகள், அணுவின் அமைப்பு, மேலும் இவற்றின் எண்களின் கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார். மாணவர்கள் மிக ஆர்வமாக இதை பற்றி அறிந்து கொண்டனர்.

பிறகு 10 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விக்னேஷ் அவர்கள் லினக்ஸ் பற்றிய ஆரம்ப புரிதலை எடுத்து கூறினார். இத்துடன் லினக்ஸ்-இல் உள்ள அடிப்படை கமெண்ட்கள் பற்றியும் எளிமையாக விளக்கினார். மாணவர்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் புதிதாக இருந்தாலும், இதை பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்பினார்கள்.

10 ஆம் வகுப்புக்கு கீழுள்ள மாணவர்களுக்கு கீபோர்டில் உள்ள சில முக்கிய ஷார்ட் கட் கீ’ஸ் பற்றி விளக்கினோம். இது அவர்களுக்கு எளிதாக இருந்தது. இதன் பிறகு கடந்த வாரங்களில் மாணவர்களுக்கு ஒரு செயல்பாடு ஒன்று தந்திருந்தோம். அதன்படி ஜிமெயில் கணக்கு உருவாக்கி மெயில் அனுப்புமாறு சொல்லப்பட்டு இருந்தது. மேலும் அதில் இணைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதை சில மாணவர்கள் நேர்த்தியாக முடித்தனர்.

இதில் விஷ்வா என்கிற மாணவர் மிக அழகாக செய்திருந்தார். அடுத்து மதுமிதா, அஸ்மிதா, பவித்ரா, பாலாஜி, சரவணன் ஆகிய மாணவர்களும் நன்றாக அனுப்பி இருந்தனர். இவர்கள் எல்லோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்களுடன் வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்ஷிகா என்கிற மாணவிக்கும் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பான புகைப்படங்களுடன் இந்த வார வகுப்பு முடிவு பெற்றது.

1 thought on “Panampattu GLUG Meetup @Jan 8, 2022”

  1. சிறப்பு தொடரட்டும் விழிப்புணர்வு பணிகள் முன்கூட்டியே அறிவிப்பு செய்தால் என்னை போல ஆர்வலர் கலந்து கொள்ள ஏதுவாகும்.

    Like

Leave a reply to thauzhavan Cancel reply