விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்
அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த
பானாம்பட்டு GLUG-இல் , Feb 26, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம்.இந்த வார வகுப்பில் Libre Office என்ற கட்டற்றமென்பொருளைப் பற்றி திரு. பழனிராஜ் அவர்கள் விளக்கினார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு திரு.திலிப் மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு புத்தகம் ஒன்றிணைக் கொடுத்து குழந்தைகளை வாசிக்கவைத்து, அந்தப் புத்தகத்தை பற்றி மாணவர்கள் விளக்கினார்கள். மாணவர்களும் ஆர்வமாக புத்தகத்தினை வாசித்தனர். இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே நிறைவடைந்தது



