விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள்.


கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றிய சிறு உரையாடலில் வகுப்பை தொடங்கினோம்.

இந்த வாரம் ஸ்டல்லரியம் (Stellarium) என்னும் கட்டற்ற மென்பொருளை கீர்த்தனா விளக்கினார். இது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும் மென்பொருள். இதன் மூலம் நாம் கிட்டதட்ட 600,000 நட்சத்திரங்களின் கட்டமைப்பு/ கூட்டமைப்புகளைப் பார்க்க முடியும் என்பதால் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்தனர். மேலும் வானில் நிகழும் சூரிய / சந்திர கிரகணம் எவ்வாறாக நிகழ்கிறது என்பது பற்றி விலக்கக்காட்சியுடன் கற்றுக்கொடுக்கப்பற்றது.

அடுத்து ஹரி பிரியா, Logical thinking தொடர்பான GCompris என்கிற கட்டற்ற மென்பொருளில் உள்ள Tower of Hanai என்னும் விளையாட்டை பற்றி விளக்கினார். இதை கொண்டு கணிதம், algorithm மற்றும் programmatic logical thinking போன்றவற்றை வளர்த்து கொள்ளலாம். இது உலகளவில் பயன்படுத்தி வரும் குழந்தைகளுக்கான எளிய மென்பொருள். மாணவர்கள் பலர் தானாகவே முன்வந்து விளையாட்டின் தீர்வைக் கண்டுப்பிடித்தனர்.மேலும் வரவிருக்கும் கூட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைப்பெற்றது. இவ்வாறாக இந்த வார வகுப்பு நிறைவுபெற்றது.