விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் May 15, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வகுப்பில் Tuxmath என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை பொன்னீலன் எடுத்தார். Tuxmath மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார்.
அடுத்ததாக Tuxmath-யை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது கணக்கு சார்ந்த Game வகையிலான மென்பொருள் என்பதால் அனைவரும் ஆர்வமாக கவனித்தனர். மேலும் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு அதை தீர்த்து கொண்டனர்.

பிறகு மாணவர்களை 3 குழுக்களாக பிரித்து அவர்களுக்கு ஆக்டிவிட்டி கொடுத்தோம்.இதனை Game என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் செய்தனர். விரைவாக செய்த குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம்.
அடுத்தாக, LibreOffice Writter என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அபிநயா வழங்கினார். பிறகு LibreOffice Writter எப்படி பயன்படுத்த வேண்டும் ,அதில் உள்ள சில விசயங்கள் பற்றி மாணவர்களுக்கு தெளிவாக கூறினார்.அடுத்ததாக அனைவருக்கும் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது.

இப்படியாக இந்த வார வகுப்பு நிறைவானது.
