TNSDC, Villupuram GLUG

VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்

படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை  உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும் வரை தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் உதவிகள் நிச்சயம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்த மற்றும் தேவையுள்ள கிராமப்புற படித்த பெண்கள் பலனடைய இத்தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
9514455559

Leave a comment