100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @August 21, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 21, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர  வகுப்பு  நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து ஹரிப்பிரியா அவர்கள் சிறு கலந்துரையாடலை செய்தார். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள்.

ஏற்கனவே அவர்களுக்கு ஒரு வகுப்பு‌ GIMP எடுக்கப்பட்டது இந்த வாரமும் GIMP பயன்படுத்தி எப்படி ஒரு போஸ்டர் உருவாக்குவது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது பின்னர் திலிப் அடிப்படையை எடுத்தார் மாணவர்கள் அதை ஆர்வமாக கற்றனர்.

பின்னர் மாணவர்களை மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு task கொடுக்கப்பட்டது அவர்கள் ஆர்வமுடன் மூன்று போஸ்டர்களை உருவாக்கினார்கள் அந்த போஸ்டர்களை இதனுடன் இனைத்து உள்ளோம் இத்துடன் இந்த வாரம் வகுப்பு இனிதே முடிவடைந்தது.

Leave a comment