Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 2, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 02, 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில், கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இந்த வகுப்பு அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. அவர்களின் கல்வி ஆர்வம், கவனிக்கும் திறன், என்ன ஒரு உற்சாகத்துடன் கேள்வி எழுப்பினர், மற்றும் பதில் கூறினார். அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் சில பரிசுகளும் பெற்று மகிழ்ந்தனர்.

அவர்கள் மேற்கொள்ளும் கணினி பயிற்சி மிகவும் தேவையான ஒன்றாக சமுதாயத்தில் இன்று வரவேற்க படுகிறது. விஜியலட்சுமி மற்றும் விக்னேஷ் File, Document, Folder என்றால் என்ன என்னும் விளக்கத்தை அளித்தனர். பிறகு விஜியலட்சுமி Libre Word பற்றி வகுப்பு எடுத்தார். அதை எப்படி பயன்படுத்துவது என தெளிவாக விளக்கினார். மேலும் அம்பேத்கர் பற்றிய ஒரு பக்க கட்டுரை எழுதி வருமாறு மாணவர்களுக்கு சிறுபணி அளிக்கப்பட்டது.

மேலும் இந்த வாரம் சிவசக்தி அவர்களும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சென்றார். இவரும் VGLUG- இன் தன்னார்வலர். பானாம்பட்டு சென்றதால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

“பாணாம்பட்டு GLUG-ல் என் முதல் நாள், இதோ பகிர்கிறேன் உங்களுடன் நான் உணர்ந்த சிலவற்றை. குறிப்பிட்ட ஒருசில நேரம் மட்டுமே பேருந்து வசதி கொண்ட பானாம்பட்டில் , VGLUG துவங்கிய ஒரு புதிய பயணம் என்னை வியக்க வைத்தது . இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில் ,கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. இதை கண்ட எனக்கு ஆரம்பத்தில் புன்னகை பூக்க வைத்தாலும் , பின்பு அறிந்து கொண்டேன் , அவர்களின் கல்வி ஆர்வத்தை . ஆஹா! என்ன ஒரு கவனிக்கும் திறன், என்ன ஒரு உற்சாகத்துடன் கேள்வி எழுப்பினர் , பதில் கூறினார் , அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் சில பரிசுகளும் பெற்று மகிழ்ந்தனர் .அவர்கள் அங்கு மேற்கொள்ளும் கணினி பயிற்சி மிகவும் தேவையான ஒன்றாக சமுதாயத்தில் இன்று வரவேற்க படுகிறது .இது போன்ற ஏழை குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை உணர்ந்து செயல் படும் VGLUG குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள் . மென்மேலும் இவர்களின் இந்த சமூக நலனுக்காக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி மனநிறைவுடன் செயல்படும் தன்னலமற்ற பயணத்தில் நானும் ஒரு பயணியாக இருக்க பெருமை படுகிறேன் . நன்றி !!!”

என்று மகிழ்வுடன் கூறியுள்ளார். இவ்வாறாக இந்த வார வகுப்பு நிறைவடைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s