VGLUG கடந்த பல ஆண்டுகளாக Free and Open Source சம்மந்தப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு சென்று அதன் மூலம் அவர்களது பொருளாதார சூழ் நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் முதற்படியாக 2019 ஆம் ஆண்டு இலவச Python and Django பயிற்சி வகுப்பும், 2021 ஆம் ஆண்டு இலவச Mobile Application Development Training in Flutter பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக 2022 ஆம் ஆண்டு Web development training சம்பந்தமான இலவச ReactJS மற்றும் Node JS வகுப்பு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. எனவே கடந்த ஜனவரி மாதம் 2022 முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பிப்ரவரி 4-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான பதிவு தொடங்கப்பட்டது.
மேலும் அதனை விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் நமது VGLUG தன்னார்வலர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று நமது போஸ்டர் அட்டைகளை கல்லூரி முதல்வர்களிடமும், HOD-களிடமும் பகிர்ந்துகொண்டு இப்பயிற்சி பற்றி விவரித்துக் கூறினார். மேலும் மாணவர்களுக்கு இதனைப் பற்றி தெரியப்படுத்தவும் கேட்டுக்கொண்டனர். இது பிரதாப், விக்னேஷ், நரசிம்மன், திலீப் மற்றும் வெங்கடேசன் இவர்களால் சாத்தியமானது மற்றும் நமது நட்பு வட்டங்கள் மூலமும் தெரிந்த கல்லூரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.














இவ்வருட பயிற்சிக்கு சுமார் 340-கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்திருந்த தகுதி வாய்ந்த அனைவரையும் நேரடியாக வரவழைத்து நேர்முக கலந்துரையாடல் மூலம் பயிற்சிக்கான நபர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. தொலைபேசி வாயிலாக, நேர்முக கலந்துரையாடல் குறித்து தகவல் நமது VGLUG தன்னார்வலர்கள் அபிநயா, வைபவி, சங்கீதா, சிவசக்தி, அமுதா, சௌந்தர்யா, ஹரிப்பிரியா, திலீப், சீனுவாசன், வெங்கடேசன், லதா, அருண், ஹரிணி, கனிமொழி, கலில் மற்றும் மணிமாறன் ஆகியோரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேர்முக கலந்துரையாடல் நிகழ்வு,
திட்டமிட்டபடி, VGLUG அறக்கட்டளையின் சார்பாக ReactJS மற்றும் NodeJS-க்கான நேர்காணல் நிகழ்வு மார்ச் 20, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த நேர்காணல் நிகழ்வில் சுமார் 120க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் தொடக்கமாக, தன்னார்வலர் கார்க்கி அவர்கள் நிகழ்விற்கு வருகை புரிந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் VGLUG தன்னார்வலர்களை வரவேற்றார்.

VGLUG குறித்த காணொளி வந்திருந்தவர்களுக்கு திரையிடப்பட்டது.
பிறகு பேசிய கார்க்கி அவர்கள் காணொளி குறித்து விளக்கிக் கூறி, எதற்கு VGLUG செயல்படுகிறது? எப்படி செயல்படுகிறது ? VGLUG இத்துணை ஆண்டுகளாக என்னென்ன செய்துள்ளது, என்னென்ன நிகழ்வுகள் நடத்தியுள்ளது என்பதை பற்றியும், இந்த இலவச பயிற்சி வகுப்பின் முக்கியத்துவத்தையும் அதன் நோக்கத்தையும் அனைத்து மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.


பிறகு பேசிய சதீஸ் அவர்கள், VGLUG-ன் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

வருகை புரிந்த மாணவர்களுக்கு நேர்காணல் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து மணிமாறன் விளக்கிக் கூறினார். எனவே VGLUG தன்னார்வலர்கள் மூலம் வருகை தந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நேர்முக கலந்துரையாடலை எளிமைபடுதும் நோக்கத்தோடு அவர்கள் பதிவு செய்ததின் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது.





அதன் அடிபடையில் அவர்களை குழுக்களாக பிரித்து கார்க்கி,மணிமாறன் ,ஹரிபிரியா, சதிஷ் ,கீர்த்தனா மற்றும் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் VGLUG தன்னார்வலர்கள் கனிமொழி, ஹரிணி, அமுதா, சங்கீதா, சீனிவாசன், பொன்னீலன், அஜித் மற்றும் ராமமூர்த்தி உதவியோடு மாணவர்கள் தனித்தனியே அழைக்கப்பட்டு நேர்முக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.






அந்த 120 மாணவர்களுக்கும் ஒருவர் தவறாது நேர்முக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.இந்த நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.கலந்து கொண்ட அனைவரையும் VGLUG இன் டெலிகிராம் குருபில் இணைய வேண்டுகோள்விடப்பட்டது. நிகழ்வு முடிந்த பிறகு VGLUG தன்னார்வலர்கள் கலந்துரையாடல் செய்தனர். பிறகு, அனைவரும் மதிய உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
பிறகு பலகட்ட கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளுக்குப்பிறகு இம்முறை 75மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் பின்வருமாறு,
தேர்ந்தெடுக்க பட்டுள்ள மாணவர்களுக்கான முதல் வகுப்பு வருங்கின்ற ஞாயிறு 3/4/2022 அன்று காலை 10-க்கு தொடங்கப்படும். எனவே தேர்ந்தெடுக்கப் மாணவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு 3/4/2022 அன்று வரவும்.
Venue:
VGLUG Foundation
Bhavani Street,
Alamelupuram,
Villupuram- 605602
(Landmark: Opposite to ES School, Near Ulagamani Kalyana Mandapam)
Contact: Mr.Manimaran – 9600789681
More details: https://vglug.org/blog
Location: https://goo.gl/maps/68BWvJKx3zxue6bj7
Event photos:
https://photos.app.goo.gl/CKbim44J2au2JKcU6
Registration details:
https://vglug.org/2022/02/04/registration-open-vglug-training-2022
அன்றைய நிகழ்வு குறித்த சிறிய காணொளி

Thanks & Credits To:
- Poster design – Vignesh, Karkee, Keerthana and Sowndarya
- Blog – Ponnelan & Manimaran
- Volunteers contribute for pre-event calling process to participants and during the event – Ajith, Sangeetha, Amutha, Harini, Sivasakthi, Kanimozhi, Venkatesan, Ponnelan, Latha, Haripriya, Khaleel, Dhilip, Sowndarya, Arun Kumar, Seenuvan, Vaibhavi and Abinaya.
- Video making – Guru
- Thanks to all volunteers and participants.
3 thoughts on “VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022”