ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
- இடம்: VGLUG Foundation,Bhavani Street,Alamelupuram,Villupuram- 605602
- நாள்:03-April-2022– நேரம் :9AM-1PM
- Map Location : https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7
அதன் அடிப்படையில் 2018, மற்றும் 2021 இல் python மற்றும் Flutter தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து.
இந்த முறை React JS மற்றும் NodeJS தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்க முடிவு செய்து அதற்கு முதற்கட்டமாக பதிவு செய்த மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
இதற்கான முயற்சியை கடந்த இரண்டு மாதங்களாக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு மேற்கொண்டது, இந்த பயிற்சியில் இணைய விண்ணப்பிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
அதில் சுமார் 400 முதல் 500 மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர் அதில் 75 மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை பொருளாதார மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மற்றும் ஆர்வம் மிகுந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலவச ReactJS மற்றும் NodeJs இன் முதல் நாள் வகுப்பு 3- ஏப்ரல் -2022 அன்று நடைபெறும் என 21-மார்ச்-2022 அன்று நடைபெற்ற MEETUP இல் கூரப்பட்டது. 21-மார்ச்-2022 அன்று நடைபெற்ற MEETUP பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள கீழே உள்ள Link யை Click செய்யவும்
அதன் அடிப்படையில் 3-ஏப்ரல்- 2022 அன்று தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு VGLUG Foundation இல் முதல் வகுப்பு நடைபெற்றது.

விழாவினை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் தன்னார்வலர் கலீல், கார்க்கி, சதிஷ் தொகுத்து வழங்கினார்,விழாவின் தொடக்க உரையாக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு எதற்காக இந்த பயிற்சியை தொடங்கியது எவ்வாறு மாணவர்கள் இதன் மூலமாக பலனடைய போகின்றனர் என்பது குறித்தும், இந்த அமைப்பில் இருக்கும் அனைவரும் உங்களைப் போலவே பயிற்சி பெற்று பலனடைந்து இன்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்துளளனர். அவர்களைப் போன்று நீங்களும் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலீல் பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் சமீபத்திய தொழில்நுட்பத்தில் React JS மற்றும் Node JS முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.




அதன்பிறகு தன்னார்வலர் சதீஷ், கீர்த்தனா அகியோர் ReactJS மற்றும் NodeJS குறித்த முன்னுரையை வழங்கினர். அதன்பின் இந்த பயிற்சியில் கற்றுக் கொண்டு இருக்கும்பொழுதே தமிழ் சமூகத்திற்கு தேவையான பல இணைய செயலிகளை உருவாக்குவது குறித்த மனநிலையை உருவாக்கினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் red & blue என்று இரு குழுக்களாகப் பிரித்து வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் சுமார் 80 நபர்கள் பங்கேற்றனர், இறுதியாக திரு சதிஷ் நன்றி உரையை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Thanks to:
- All the VGLUG Volunteers.
- Thanks to all the supporters, participants, visitors and well-wishers.
2 thoughts on “இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022”