விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வகுப்பில் Gimp என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை நரசிம்மன் எடுத்தார். Gimp மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார்.

அடுத்தாக gimp-இல் உள்ள அடிப்படை tools’ஐ பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மென்பொருள் என்பதால் அனைவரும் ஆர்வமாக கவனித்தனர். மேலும் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு அதை தீர்த்து கொண்டனர்.

பிறகு மாணவர்களை 3 குழுக்களாக பிரித்து அவர்களுக்கு ஆக்டிவிட்டி கொடுத்தோம். வகுப்பில் கற்று கொண்டதை வைத்து சிலவற்றை செய்ய சொல்லி இருந்தோம். இந்த ஆக்டிவிட்டியை எல்லோரும் சிறப்பாக செய்தனர். விரைவாக செய்த குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம்.

அடுத்தாக, Mozilla-Firefox என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அமுதா வழங்கினார். பிறகு ‘மந்திர குடை’ என்கிற கதையை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கதை மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு கொண்டனர்.
இப்படியாக இந்த வார வகுப்பு நிறைவானது.
